×

கமல்ஹாசனால் பரவசம் அடைந்த பாக்யஸ்ரீ

 


தெலுங்கில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற போராடி வரும் பாக்ய போர்ஸ், தமிழில் துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘காந்தா’ என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது ‘தாய் கிழவி’ சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். கமல்ஹாசன் தயாரித்து, சிறப்பு வேடம் ஒன்றில் நடிக்க சம்மதித்துள்ளார். இந்நிலையில், கமல்ஹாசனை நேரில் சந்தித்து பேசியது குறித்து பாக்யஸ்ரீ போர்ஸ் வெளியிட்டுள்ள பதிவில், ‘மிகவும் அன்பிற்குரிய கமல்ஹாசன் சார், உங்கள் வளர்ச்சியை பார்த்து வளர்ந்த, என் மனதிற்குள் இருக்கும் அந்த சிறுமி நான்.

நீங்கள் எனது தோள்களில் கைவைத்து, எனக்கு வாழ்த்து தெரிவித்த அந்தநொடியில், மகிழ்ச்சியில் துள்ளி குதித்தாள் அச்சிறுமி. ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் நான் இணைந்திருப்பதில் பெருமைப்படுகிறேன். அதோடு, உங்களை பெருமைப்படுத்தும் வகையில் நான் செயல்படுவேன் என்று உறுதியளிக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். தமிழில் அவரது ‘காந்தா’ படம் அதிக வரவேற்பை பெறாததால் அப்செட்டாகி இருந்த பாக்ய போர்ஸ், ‘சேயோன்’ படம் தனது மனக்காயத்தை ஆற்றும் என்று நம்புகிறார். தற்போது ‘சேயோன்’ படத்துக்காக அவர் தமிழில் சரளமாக பேச பயிற்சி பெற்று வருகிறார்.

Tags : Baqyasree ,Kamal Hassan ,Baghya Porz ,Tulkar Salman ,Sivakarthikeyan ,Sivakumar Murukesan ,Kamalhassan ,Baqyasri Porz ,
× RELATED பிளாஸ்ட் விமர்சனம்…