×

அரசியல் பின்னணியில் உருவாகும் தர்ணா

சென்னை: எஃப்எம்.எஸ். மீடியாஸ், சி.எஸ்.எம் கிரியேஷன், சஷ்டி சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் தர்ணா. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் சூரிய கிரிமலையில் அமைந்துள்ள முருகன் கோயிலில் திரைப்படத்தின் துவக்கவிழா நடந்தது.

ஒரு வித்தியாசமான அரசியல் களத்தை மையமாக வைத்து உருவாகி வரும் தர்ணா படத்தின் படப்பிடிப்பிற்கான முதல் காட்சியை இயக்குநர் சக்திவேல் நாகப்பன் இயக்க, நிர்வாகத் தயாரிப்பாளர் டாக்டர் மூதுரை பொய்யாமொழி கிளாப் அடிக்க, சந்திரன் சுவாமி ஒளிப்பதிவு செய்ய படத்தின் நாயகன் கருந்தமிழ் சூரியன், நாயகி எலன் ஆகியோர் முதல்காட்சியில் நடித்தனர். இணைத்தளிப்பாளர்கள் சி.எஸ்.எம்.பழனிசாமி, சஷ்டி அ.பழனிசாமி கலந்துகொண்டனர். தீபாவளி விடுமுறையில் இப்படம் திரைக்கு வரும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Tags : Chennai ,FMS ,Medias ,CSM Creation ,Shashti Cinemas ,Murugan Temple ,Surya Kirimalai ,Kumarapalayam ,Namakkal district ,Sakthivel Nagappan ,Dr. Moothurai ,Chandran Swamy ,
× RELATED கணவர் முன்பே சமந்தாவுக்கு ரசிகர் புரபோஸ்