- சங்கிலி சிபிஏ
- ஏ. பழனிசாமி
- அலகர் படங்கள்
- முருகா' அசோக்
- யாழினி முருகன்
- பக்கோடா பாண்டி
- நமோ நாராயணன்
- ஈஸ்வரன் கார்த்திகேயன்
- முகேஷ் முனுசாமி
- விமல்
- கலையரசன்
- தரிசனம்
- விக்ராந்த்

அழகர் பிக்சர்சுக்காக புதுகை ஏ.பழனிச்சாமி தயாரிக்க, சங்கிலி சிபிஏ எழுதி இயக்கியுள்ள படம், ‘வடமஞ்சுவிரட்டு’. இதில் ‘முருகா’ அசோக், யாழினி முருகன், பக்கோடா பாண்டி, நமோ நாராயணன் நடித்துள்ளனர். ஈஸ்வரன் கார்த்திகேயன் ஒளிப்பதிவு செய்ய, முகேஷ் முனுசாமி இசை அமைத்துள்ளார். படம் குறித்து சங்கிலி சிபிஏ கூறுகையில், ‘முதலில் இந்த கதையை விமல், கலையரசன், தர்ஷன், விக்ராந்த் போன்ற ஹீரோக்களிடம் சொன்னேன். அனைவரும் சொல்லி வைத்த மாதிரி, தங்களிடம் கால்ஷீட் இல்லை என்று கறாராக சொல்லிவிட்டனர்.
ஆனால், அது உண்மையான காரணம் இல்லை. கதைப்படி காளை மாட்டுடன் நடிக்க வேண்டும் என்று நான் சொன்னவுடன் அவர்கள் பயந்தனர். ஆனால், அசோக் மட்டுமே துணிச்சலாக காளை மாட்டுடன் நடிக்க ஒப்புக்கொண்டு வந்தார். ஹீரோயின் தேர்வு நடந்தபோது, முதலில் யாழினி முருகனின் போட்டோவை பார்த்துவிட்டு, அவரை யாரும் தேர்வு செய்யவில்லை.
ஆனால், காளை மாட்டுடன் நடிக்க வேண்டும் என்று சொன்னபோது, பல நடிகைகள் பயந்து ஓடி விட்டனர். ஆனால், யாழினி முருகன் மட்டும்தான் காளை மாட்டுடன் நடிக்கிறேன் என்று தைரியமாக முன்வந்தார். தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது’ என்றார்.

