×

ஆகஸ்ட் 14ல் சூர்யா படம் ரிலீஸ்

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடித்துள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ என்ற படம், வரும் ஆகஸ்ட் 14ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் மனதை வருடும் தருணங்கள் நிறைந்த முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினராக படம் உருவாகியுள்ளது. சூர்யதேவர நாகவம்சி, சாயி சவுஜன்யா இணைந்து தயாரித்துள்ளனர். டீசர் மற்றும் டைட்டில் அறிவிப்பு வெளியான தருணத்தில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் இப்படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, சூர்யா ஒரு குழந்தையுடன் இடம்பெற்றிருந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர், சூர்யாவின் பழைய வசீகரமான நடிப்பு பாணியை மீண்டும் நினைவூட்டி இருப்பதுடன், குடும்ப ரசிகர்களிடையே உடனடி வரவேற்பை பெற்றது. ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றிப் படங்களை தொடர்ந்து வெங்கி அட்லூரி எழுதி இயக்கியுள்ள இப்படம், ஃபீல்குட் எண்டர்டெயினராக இருக்கும் என்று நம்பப்படுகிறது. மமிதா பைஜூ, ராதிகா, ரவீணா டாண்டன் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்க, நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நவீன் நூலி எடிட்டிங் செய்ய, வி.வெங்கட் சண்டைப் பயிற்சி அளித்துள்ளார். தமிழ்நாட்டில் திங்க் ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது. கரா ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ளன.

Tags : Venky Atluri ,Suriya ,Suryathevar Nagavamsi ,Sai Sowjanya ,
× RELATED ராம் சரண் பாதுகாவலருக்கு ஒருநாளைக்கு ரூ.2 லட்சம்!