×

அதிரடி தமிழ் டப்பிங்கை மறக்க முடியாது: பசில் ஜோசப் நெகிழ்ச்சி

சென்னை: அருண் அனிருதன் இயக்கத்தில் டொவினோ தாமஸ், பசில் ஜோசப், வினீத் னிவாசன், ரியா ஷிபு நடிப்பில் கடந்த வாரம் மலையாளத்தில் வெளியான ‘அதிரடி’ என்ற படம், அதே பெயரில் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு, வரும் 22ம் தேதி திரைக்கு வருகிறது. பசில் ஜோசப், அனந்து.எஸ் இணைந்து தயாரித்துள்ளனர். அருண் அனிருதன், பால்சன் ஸ்கரியா இணைந்து எழுதியுள்ளனர். தமிழில் இப்படத்தை பைவ் ஸ்டார் செந்தில் வெளியிடுகிறார். இதை முன்னிட்டு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில். இந்திய அணி கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பசில் ஜோசப் நெகிழ்ச்சியுடன் பேசியதாவது: இந்த படத்துக்கு தமிழில் நான்தான் டப்பிங் செய்துள்ளேன்.

அதனால் எனக்கு தமிழ் தெரியும். சிறுவயதில் இருந்து அதிரடி என்ற வார்த்தையை அதிகமாக கேட்டிருக்கிறேன். தற்போது அதே வார்த்தையை தலைப்பாக கொண்ட படத்தில் நடித்திருக்கிறேன். இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும். மலையாளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ் ரசிகர்களுக்காக வசனங்கள் மாற்றப்பட்டு, தமிழ் பாடல்களை பயன்படுத்தி இருக்கிறோம். சஞ்சு சாம்சனை நடிக்க வைக்க முயற்சித்தோம். அவர் விரும்பவில்லை. தமிழில் டப்பிங் செய்தது அருமையான அனுபவம். முதலில் சில வார்த்தைகள் கடினமாக இருந்தது.

Tags : Basil Joseph Lainichi ,Chennai ,Arun Anirudhan ,Tovino Thomas ,Basil Joseph ,Vineeth Nivasan ,Rhea Shibu ,Anandhu.S ,Paulson Scaria ,Five Star Senthil ,
× RELATED சேயோன் படப்பிடிப்பு தொடங்கியது