- ஜேம்ஸ் பாண்ட்
- லாஸ் ஏஞ்சல்ஸ்
- டேனியல் கிரேக்
- ஹாலிவுட்
- ஆரோன் டெய்லர்-ஜான்சன்
- தியோ ஜேம்ஸ்
- ஹாரிஸ் டிக்கின்சன்
- ஹென்றி கேவில்

லாஸ்ஏஞ்சல்ஸ்: உலகளவில் மிக நீண்ட காலம் ஓடிக்கொண்டிருக்கும் வெற்றிகரமான திரைப்படத் தொடர்களில் ஜேம்ஸ்பாண்ட் தொடரும் ஒன்று. அந்த வகையில் சில ஆண்டுகளாக ஜேம்ஸ்பாண்டாக இருந்து வரும் டேனியல் கிரெய்க், அதில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் யார் என தேடி வருகின்றனர். அதில் ரசிகர்களும் பல ஹாலிவுட் நடிகர்களின் பெயர்களை பரிசீலனை செய்து வருகின்றனர். நடிகர்கள் ஆரோன் டெய்லர்-ஜான்சன், தியோ ஜேம்ஸ், ஹாரிஸ் டிக்கின்சன் மற்றும் ஹென்றி கேவில் போன்ற பிரபலங்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக ஹாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்பு ஜேம்ஸ் பாண்டாக நடித்த பியர்ஸ் பிராஸ்னனும் மீண்டும் பாண்ட் ஆக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். அமேசான் மற்றும் எம்.ஜி.எம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் அடுத்த புதிய ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தை டெனிஸ் வில்லெனுவ் இயக்க உள்ளார். அதற்காக இதில் ஒருவரை தான் அடுத்த ஜேம்ஸ்பாண்டாக தேர்வு செய்ய உள்ளனர். அவர்களுக்கான ஆடிஷனும் படக்குழு நடத்தி வருகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

