×

பீரியட் கதையை இயக்கும் சசிகுமார்

தமிழில் ‘எவிடென்ஸ்’, ‘நா நா’, மீண்டும் ராஜூ முருகன் இயக்கத்தில் ஒரு படம், ‘வதந்தி 2’ வெப்தொடர் என்று, மீண்டும் சசிகுமார் பிசியாக நடித்து வருகிறார். இதில் ‘வதந்தி 2’ வெப்தொடரில் காவல்துறை அதிகாரி கேரக்டரில்
சசிகுமார் நடிக்கிறார். விஜய் ஆண்டனி நடித்த ‘சலீம்’ என்ற படத்தை இயக்கிய என்.வி.நிர்மல் குமார் இயக்கத்தில் ‘நா நா’ என்ற படத்தில் சசிகுமார் நடிக்க, இன்னொரு ஹீரோவாக சரத்குமார் நடித்துள்ளார்.

கிராமத்தில் இருக்கும் எளிய மனிதனை, இந்த சமூகம் எப்படி உருமாற்றுகிறது என்பது கதை. சசிகுமார் கேரக்டர் பெயர், நா.நாராயணன். அதை சுருக்கி, ‘நா நா’ என்று தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. பாலா அரண் இயக்கத்தில் ஒரு படத்தில் சசிகுமார் நடிக்கிறார். இதில் மலையாள நடிகை அம்ருதா ஹீரோயினாக நடித்துள்ளார். ‘நந்தன்’ இரா.சரவணன் இயக்கத்தில் மீண்டும் சசிகுமார் நடித்துள்ளார். இப்படங்களை முடித்த பிறகு மீண்டும் படம் இயக்க ஆயத்தமாகியுள்ள சசிகுமார், பீரியட் கதை ஒன்றை தேர்வு செய்துள்ளார்.

Tags : Sasikumar ,Raju Murugan ,NV ,Nirmal Kumar ,Vijay Antony ,Sarathkumar ,
× RELATED எக்ஸாம் வெப்தொடர்: விமர்சனம்