×

ஜோம்பி ஜானரில் ‘பிரபு வேலு’, ‘வடி தேவா’

25 வருடங்களுக்கு பிறகு பிரபுதே​வா, வடிவேலு இணைந்து நடிக்​கும் படம், ‘பேங் பேங்’. இதை சாம் ரோட்​ரிக்ஸ் இயக்​கு​கிறார். கேர்​ஆர்ஜி கண்ணன் ரவி, தீபக் ரவி இணைந்து தயாரிக்கின்றனர். முக்கிய வேடம் ஒன்றில் பப்லு பிருத்​வி​ராஜ் நடிக்​கிறார்.

ஹெச்.சி.வேணு ஒளிப்​ப​திவு செய்​ய, யுவன் சங்​கர் ராஜா இசை அமைக்​கிறார். மாறுபட்ட ஜோம்பி வகை ஜானரில் உரு​வாகும் இப்​படம், ஆக்‌ஷன் மற்றும் காமெடி, ஹாரர் அம்​சங்​கள் கலந்த கமர்​ஷியல் படமாக தயாரா​கிறது. முன்​ன​தாக வெளி​யான டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்​திருந்​தது. அதில் ஜோம்​பிகளால் சூழப்​பட்ட நிலையில் பிரபுதேவா, வடிவேலு ஆகியோர் துப்​பாக்​கி​யுடன் தோன்​றிய காட்​சிகள் வைரலானது. ‘பிரபு வேலு’, ‘வடி தேவா’ போன்ற பெயர்​கள் ரசிகர்​களின் ஆர்​வத்தை அதிகரித்தது. இந்​தோ​னேசி​யா​ மவுண்ட் புரமோ எரிமலை பகுதி​யில் தொடங்​கிய படப்​பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்​குழு​ தெரி​வித்​துள்​ளது.

Tags : Prabhu Velu ,Vadi Deva ,Prabhu Deva ,Vadivelu ,Sam Rodrigues ,CareRG ,Kannan Ravi ,Deepak Ravi ,Bablu Prithviraj ,H.C. Venu ,Yuvan Shankar Raja ,
× RELATED எக்ஸாம் வெப்தொடர்: விமர்சனம்