×

சமூக வலைத்தளங்களால் பாதிக்கப்பட்ட சாரா அலிகான்

சமீபத்தில் ஒரு பேட்டியில், ‘சமூக ஊடக விமர்சனங்கள் உங்கள் மனநிலையை பாதிக்கிறதா?’ என்று, பாலிவுட் நடிகை சாரா அலிகானிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ‘சமூக வலைத்தள விமர்சனங்களால் நான் பாதிக்கப்படுவது இல்லை என்று சொன்னால், அது பொய். நான் கடுமையாக பாதிக்கப்படுகிறேன். ஒரு நடிகையாக நான் மேற்கொள்ளும் பணிகள் எனது ரசிகர்களுக்காகத்தான். அவர்களை நான் ஏமாற்றும்போது அதிக வருத்தம் ஏற்படுகிறது. திரையுலகிற்கு வந்த ஆரம்பகாலத்தில் எனது முழு கவனமும் மக்கள் மீது மட்டுமே இருந்தது.

ஆனால், திரையுலகில் சில காலம் பயணித்த பின்பு, நமக்காகவும் நாம் உழைக்க வேண்டும் என்பதை புரிந்துகொண்டேன். இதை எனது திரையுலக வாழ்க்கையில் சற்று தாமதமாக கற்றுக்கொண்டேன். நாம் செய்யும் வேலையை நிஜமாகவே ரசித்து, 100 சதவீத கடுமையான உழைப்பை கொடுத்தால் நிம்மதி கிடைக்கும். ‘என்னால் முடிந்தவரையில் சிறப்பாக செய்துவிட்டேன். இனி எல்லாம் கடவுள் கையில்’ என்று நினைக்கும்போது, தேவையில்லாத குற்ற உணர்ச்சியோ அல்லது மன உளைச்சலோ நமக்கு ஏற்படுவது இல்லை’ என்றார்.

Tags : Sara Ali Khan ,Bollywood ,
× RELATED எக்ஸாம் வெப்தொடர்: விமர்சனம்