×

நடிகர் ஆகிறார் இயக்குனர் ஷங்கர்

சென்னை: ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் ரஜினிகாந்த் அடுத்தபடியாக ‘தலைவர் 173’ (தற்காலிக தலைப்பு) படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்தின் 173ம் படமாக இது அறிவிக்கப்பட்டது. முன்னதாக சுந்தர் சி இந்த படத்தை இயக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியாகி பின் சுந்தர் சி படத்தில் இருந்து விலகினார். அவரைத் தொடர்ந்து ‘டான்’ படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி ரஜினியை இயக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. அண்மையில் தலைவர் 173 படத்தின் இயக்குனர் மீண்டும் மாற்றப்பட்டுள்ளதாகவும் அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. மேலும் இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக இயக்குனர் ஷங்கரை நடிக்க வைக்க பேச்சு நடக்கிறதாம். கதாபாத்திரம் பிடித்திருந்ததால் ஷங்கர் இந்த படத்தில் நடிக்க சம்மதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags : Shankar ,Chennai ,Rajinikanth ,Rajnikanth ,Rajkamal Films ,Sundar C ,Sundar C. ,Rajini ,Chairman 173 ,
× RELATED நடிகை அர்ச்சனா பூரன் சிங் மகனிடம்...