×

மெக்சிகோவில் நடந்த விழாவில் வாரணாசி படம் நிராகரிப்பா?

சென்னை: எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு, பிருத்விராஜ் சுகுமாரன், பிரியங்கா சோப்ரா நடிக்கும் பான் வேர்ல்ட் படம், `வாரணாசி’. ஆஸ்கர் விருது வென்றுள்ள எம்.எம்.கீரவாணி இசை அமைக்கிறார். இப்படத்தின் பிடிஎஸ் காட்சிகள் மெக்சிகோவில் நடந்து வரும் ‘காமிக் கான் எக்ஸ்பீரியன்ஸ் எம்எக்ஸ் 2026’ என்ற நிகழ்ச்சியில் திரையிடப்பட்டது. அப்போது எஸ்.எஸ்.ராஜமவுலி பேசிய ஒரு வீடியோ திரையிடப்பட்டது.

அது வருமாறு: இதற்கு முன்பு நான் இயக்கிய ‘பாகுபலி’ படத்தில் நகர மையம், சிம்மாசனம் போன்றவை புகழ்பெற்ற Chichen Itza பிரமிடை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டன. ஆனால், மெக்சிகன் வரலாறு, பாரம்பரியம், கலாச்சாரத்தை பற்றிய எனது அறிவு மிகவும் குறைவு என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால், இப்போது ​​உங்களை போன்ற அற்புதமான மக்களை பற்றி மேலும் தெரிந்துகொள்ள இது எனக்கு உதவும் என்று நம்புகிறேன். ‘ஆர்ஆர்ஆர்’ படம் இதை எனக்கு செய்தது. ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு உலகம் முழுவதும் ஆடினார்கள்.

* இன ரீதியான பாகுபாடு
இந்த நிகழ்வில் ‘Avengers: Doomsday’, ‘Spider-Man: Brand New Day’, ‘Supergirl’ ஆகிய திரைப்படங்களும், ‘House of the Dragon’ என்ற வெப்தொடரின் காட்சிகளும் திரையிடப்பட்டது. ‘வாரணாசி’ படம் சம்பந்தமான நிகழ்வின்போது, அதை பார்வையாளர்கள் பலர் புறக்கணித்து சென்றதாகவும், இது இன ரீதியான நிராகரிப்பு என்றும் நெட்டிசன்கள் பலர் இணையதளங்களில் கருத்து தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Mexico ,Chennai ,SS Rajamouli ,Mahesh Babu ,Prithviraj Sukumaran ,Priyanka Chopra ,MM Keeravani ,BTS ,Comic Con Experience MX 2026 ,Chichen Itza ,
× RELATED யூடியூபில் கேடி படத்தின் டிரைலர்...