×

நேற்று ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக இருந்த தாதா லாரன்ஸ் பிஷ்னோய் வெப் தொடருக்கு ஒன்றிய அரசு தடை

புதுடெல்லி: பஞ்​சாப்பை சேர்ந்​த தாதா லாரன்ஸ் பிஷ்னோய், தொடர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு, பல்வேறு வழக்​கு​களில் சிக்கியிருக்கிறார். தற்​போது குஜ​ராத் சிறையில் அடைக்​கப்​பட்​டுள்​ளார் என்றாலும், அங்​கிருந்தபடியே தனது கூட்​டாளி​களின் மூலம் சமூக விரோத செயல்​களில் ஈடு​பட்டு வரு​வ​தாக கூறப்படு​கிறது. பாடகர் சித்து மூஸ்​வாலா​வின் படு​கொலை, சல்​மான்கான் வீட்டில் துப்​பாக்​கிச்சூடு நடத்​தி​யது, சல்மான்கானின் நண்​பரும் மற்றும் மகா​ராஷ்டிர மாநில முன்​னாள் அமைச்​சரு​மான பாபா சித்​திக் சுட்​டுக் கொல்​லப்​பட்​டது உள்பட பல்​வேறு வழக்​கு​களில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்​பல் ஈடு​பட்​டுள்ள​தாக கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில், தாதா லாரன்ஸ் பிஷ்னோய் வாழ்க்கை சம்பவங்களை தழுவி, ‘லாரன்ஸ் ஆஃப் பஞ்​சாப்’ என்ற வெப்தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஜீ5 ஓடிடி தளத்​தில் நேற்று வெளி​யாகும் என்று அறிவிக்​கப்​பட்​டது. இத்​தொடரின் உள்​ளடக்​கத்​தில் குற்​றச்​செயல்களை பெரு​மைப்​படுத்​தும் சாத்​தி​யக்​கூறுகள் இருப்பதால், சர்ச்​சைக்​குரிய வெப்தொடரை வெளி​யிட வேண்​டாம் என்று ஜீ5 ஓடிடி தளத்​துக்கு மத்​திய தகவல் மற்​றும் ஒளிபரப்பு அமைச்​சகம் அறிவுறுத்​தி​யது. இதையடுத்து வெப்தொடரின் வெளி​யீடு தற்காலிக​மாக நிறுத்​தி வைக்கப்​பட்​டுள்​ளது.

Tags : Union government ,New Delhi ,Dada Lawrence Bishnoi ,Punjab ,Gujarat ,Lawrence Bishnoi ,Sidhu Moosewala ,Salman Khan ,Maharashtra ,Baba Siddique ,
× RELATED நடிகை அர்ச்சனா பூரன் சிங் மகனிடம்...