×

தீ-யின் வாரி வாரி பாடல் வெளியானது

சென்னை: உலகளாவிய கவனத்தை ஈர்த்து வரும் புகழ்பெற்ற ஆஸ்திரேலியா-தமிழ் பாடகி மற்றும் பாடலாசிரியரான தீ (Dhee), ‘வாரி வாரி’ என்ற தனிப்பாடலுடன் மீண்டும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். வோண்டாகர்ள் மற்றும் திவா சாவேஜ் ஆகியோருடன் இணைந்து வெளியான “Ancient Seed” மற்றும் எட் ஷீரனுடன் இணைந்து இடம்பெற்ற “Don’t Look Down” போன்ற சர்வதேச அளவிலான பாடல்களில் தொடர்ந்து பங்கேற்று வந்த அவர், தற்போது இந்த புதிய பாடலை வெளியிட்டுள்ளார். மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பாடலாசிரியர் சாவன் கோடேச்சா, ரிபப்ளிக் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நிறுவிய அமெரிக்காவின் விஸ்வா ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துடன் தீ ஒப்பந்தம் செய்துள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையிலும், விவேக் எழுதிய வரிகளுடனும், விஸ்வா ரெக்கார்ட்ஸுடன் இணைந்து, தீ தனது மனதை வருடும் அழகான பாடலான ‘வாரி வாரி’யை ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக தீ கூறும்போது, ‘‘இந்த பாடல் நம்மை விட்டு பிரிந்த, இனி இல்லாத ஒருவரையோ அல்லது ஒன்றையோ பற்றியது: தொலைந்து போன ஒரு உணர்வை பற்றியது. இந்தப் பாடல் முழுவதுமே வழியில் நீங்கள் தொலைத்திருக்கக் கூடிய உங்களைத் தேடி, அந்த உணர்வை மீண்டும் பெற முயற்சிப்பதாகும்’’ என்றார்.

Tags : Dhee ,Chennai ,Vondagirl ,Diva Savage ,Ed Sheeran ,
× RELATED கவர்ச்சியை ஆதரிக்கும் ரைசா வில்சன்