20 நகங்களும் உடைபட்டால்…

நன்றி குங்குமம் டாக்டர்Wellnessநகங்கள் என்பவை விரல்களுக்கான பாதுகாப்பு கவசம், அழகு தரும் கிரீடம். அதுவே நம் ஆரோக்கியம் காட்டும் கண்ணாடியும் கூட. விரல் நகங்களின் நிறம், தன்மையைப் பொறுத்து ஒருவரின் உடல்நலனையும் கணிக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். 20 Nail dystrophy syndrome என்பதும் அப்படி குறிப்பிடத்தக்க ஒரு விஷயமே!அது என்ன 20 Nail dystrophy syndrome? எதனால் இப்படி ஒரு பெயர்?சிலருக்கு கால்கள் மற்றும் கை விரல்களின் நகங்கள் சொரசொரப்பாகவும், உடைந்தும் பாதிக்கப்பட்டிருக்கும். அதுதான் இந்த டிஸ்ட்ரோபி சிண்ட்ரோம். இந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களின் நகங்கள் கிட்டத்தட்ட உப்புக் காகிதம் போலவே சொரசொரப்பாகிவிடும். இதனால் Sandpaper nails என்ற மற்றொரு பெயரும் சரும நல மருத்துவர்கள் வைத்திருக்கிறார்கள். 20 நகங்களும் பாதிக்கப்படும் என்றாலும், சிலருக்கு ஒரு சில நகங்கள் மட்டுமே கடினமானதாகவும், உடைந்தும் போகக்கூடும். இப்பிரச்னை பெரும்பாலும் சிறுவயதில் வரக்கூடியது. இதற்கான சரியான காரணங்கள் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும், பிற சரும நோய்களான லிச்சன் ப்ளேனஸ், சொரியாசிஸ் மற்றும் அலோபேசியா அரேட்டா போன்றவற்றால் இந்த குறைபாடு ஏற்படுகிறது. சிலருக்கு பரம்பரைத் தன்மையாலும் வரக்கூடும். சமயங்களில் ஒரே குடும்பத்தில் பலருக்கும் வருவதுண்டு. இதில் ஓர் ஆறுதலான விஷயம், பெரும்பான்மையானோருக்கு சில நாட்களில் தானாகவே டிஸ்ட்ரோபி சிண்ட்ரோம் மறைந்துவிடும். சிலருக்கு மட்டுமே நீண்ட நாட்கள் ஆனாலும் நிலைமை மாறாமல் அப்படியே இருக்கும். நகங்கள் கடினமாகவும், சொர சொரப்பாக, பாதி உடைந்து போய் காட்சியளிக்கும். சில நேரங்களில், நகக்கண்களிலிருந்து(Nailsbed) விலகி தனியாகத் தூக்கிக் கொண்டும் இருக்கும். மேற்கண்ட மாறுதல்கள் நகங்களில் உணர்ந்தால் எச்சரிக்கையாகிவிடுங்கள். ஆரம்பநிலையிலேயே சருமநோய் நிபுணரின் அறிவுரையுடன் சிகிச்சை எடுத்துக் கொண்டால் விரைவில்; குணமடையலாம்.– இந்துமதி

The post 20 நகங்களும் உடைபட்டால்… appeared first on Dinakaran.

Related Stories: