டெல்லி ‘தேசபக்தி’ பட்ஜெட் 2021-2022: வரும் வெள்ளி முதல் 75 வாரம் சுதந்திரதின கொண்டாட்டம்

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் தொடர்ந்து, இந்த பட்ஜெட்டை தேசபக்தி பட்ஜெட்டாக தாக்கல் செய்வதாக சிசோடியா கூறினார். அதோடு, 75வது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் 75 வார தொடர் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும் என பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியின் ஒருபகுதியாக இந்த வெள்ளிக்கிழமை முதல் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 வரை நடைபெறவிருக்கும் 75 வாரங்கள் கொண்டாட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ‘பெஸ்டிவல் ஆப் இந்தியா’ மற்றும் ‘இந்தியன் கிளாசிக்கல் மியூசிக் பெஸ்டிவல்’ ஆகியவற்றின் கீழ் நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.500 அங்கன்வாடி மையம் அமைக்கப்படும்நகரத்தின் பல்வேறு பகுதிகளில் 500 அங்கன்வாடி மையங்களை நிறுவ அரசு முடிவு செய்துள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் அவர்களுக்கு பெரிய பங்கை வழங்குவதற்கும் ஒரு புதிய திட்டத்தை தொடங்கப்படும். ‘சஹேலி சமன்வே கேந்திரா’ திட்டத்தின் கீழ், சுய உதவிக்குழுக்களை ஊக்குவிப்பதற்கும் 500 அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்படும் என்று துணை  முதலமைச்சர் மணீஷ் சிசோடியா 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சமர்ப்பிக்கும் போது தெரிவித்தார். மேலும், சமூக நலன், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மற்றும் எஸ்சி / எஸ்டி / ஓபிசியின் நலன்கள் துறைக்கு ரூ.4,750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.* 2048ம் ஆண்டில் டெல்லியில் ஒலிம்பிக் போட்டிடெல்லியில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்பதை கனவாக கொண்டுள்ளதாக பட்ஜெட் தாக்கலின் போது சிசோடியா தெரிவித்தார். இதுபற்றி சிசோடியா தனது பட்ஜெட் உரையின் போது தெரிவிக்கையில் கடந்த 1896ம் ஆண்டு கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் தொடங்கியது முதல் தற்போது வரை ஒலிம்பிக் ஜோதி டெல்லிக்கு வரவில்லை. எனவே, வரும் 2048ம் ஆண்டில் டெல்லியில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த வேண்டும் என்பதை கனவாக கொண்டுள்ளோம். 32வது ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் நடத்தப்படுகிறது. அதற்கு பிறகான மூன்று ஒலிம்பிக் போட்டிகளும் நடத்தப்பட உள்ள நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டன. 39வது ஒலிம்பிக் போட்டியை டெல்லியில் நடத்த வேண்டும். இதற்கேற்ப டெல்லியின் விளையாட்டு பல்கலை கழகம் அமைக்கப்படுவதோடு விளையாட்டுகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை எற்படுத்த திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார். * ஸ்போக்கன் இங்கிலீஷ், உடல்மொழி திறனை வளர்க்க சிறப்புத் திட்டம்அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசுவது என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. இந்த குறையை போக்கி, இளைஞர்களிடையே ஆங்கில தொடர்பு திறனை மேம்படுத்துவதற்காக, உயர்கல்வி இயக்குநரகம் பள்ளிப்படிப்பை முடித்த  மாணவர்களுக்கான திட்டத்தையும் பட்ஜெட்டில் முன்மொழிந்தது. இந்தத் திட்டத்தின் மூலம், மாணவர்கள் தங்கள் ஆங்கிலம் பேசும் திறனை மேம்படுத்திக்கொள்ள முடியும், இது  அவர்களுக்கு வேலைவாய்ப்பை பெறவும் அல்லது வெளிநாடுகளில் உள்ள உயர் கல்வி  நிறுவனங்களில் சேர்க்கை பெறவும் உதவும். இதற்காக ஆங்கிலம் பேசும் படிப்புகளை வழங்கும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று சிசோடியா தெரிவித்துள்ளார். அதேபோன்று, ஆங்கில உரையாடலில் கவனம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல், உடல் மொழி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியிலும் கவனம் செலுத்தப்படும். இதற்காக மூன்று மாத காலத்திற்கு பள்ளி வகுப்பறையில் நடநத்தப்படும் வழக்கமான பயிற்றுவித்தல் வகுப்பு மற்றும் சுய கற்றல் வகுப்பு மூலம் சுமார் 5 முதல் 6 லட்சம் மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைவார்கள் என்றும் சிசோடியா கூறினார்.* திறன் மேம்பாடு, விளையாட்டு பல்கலை பணிகள் துவக்கம்தேசிய தலைநகரில் சட்ட பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என் சிசோடியா பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். இதுபற்றி சிசோடியா தனது பட்ஜெட் உரையின் போது குறிப்பிடுகையில், “உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வித் துறையில், டெல்லி திறன் மற்றும் தொழில் முனைவோர் பல்கலைக்கழகம் தனது பணிகளைத் தொடங்கியுள்ளது. விளையாட்டு பல்கலைக்கழகமும் இந்த ஆண்டு தனது நடவடிக்கைகளைத் தொடங்கும். எதிர்காலத்தில் சட்டம் படிக்க  விரும்பும் மாணவர்களுக்காக புதுடெல்லி சட்ட பல்கலைக்கழகத்தையும் திறக்க டெல்லி அரசு தயாராகி வருகிறது. இது சட்டத்துறையில் ஒரு தொழிலை உருவாக்க விரும்பும் மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும்” என்றார். கல்வித்துறைக்கு மட்டும் ரூ.16,377 கோடி ஒதுக்கீடு நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு மட்டும் சிசோடியா ரூ.16,377 கோடி ஒதுக்கியுள்ளார். இது மொத்த பட்ஜெட்டில் நான்கில் ஒருபங்காகும் என்பது குறிப்பிடத்தக்கது.* புதிய கட்டிட கட்டுமானப்பணி 2023ம் ஆண்டில் முடிவடையும் தேசிய தலைநகில் உயர்கல்விக்கான இடங்களை  36.42 சதவீதமும் தொழில்நுட்பக்  கல்வியில் 66.44 சதவீத இடங்களும் அதிகரித்துள்ளன. குரு கோபிந்த் சிங் ஐபி பல்கலைக்கழகத்தின் கிழக்கு வளாகத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப்பணிகள் இந்த ஆண்டு மே மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வியில் சேர்க்கையை மேலும் உயர்த்தும். இதுதவிர, திர்பூர் மற்றும் ரோஹினியில் உள்ள அம்பேத்கர்  பல்கலைக்கழகத்தின் புதிய வளாகங்கள் வரும் செப்டம்பர் 2023 க்குள் கட்டுமானப்பணிகள் முடிக்கப்படும். அதன்மூலம் மாணவர்களுக்கான சேர்க்கை திறன் 8500 ஆக அதிகரிக்கும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.* ரூ.10 லட்சம் வரை கல்வி கடன் வழங்கும் திட்டம் தொடரும்ஆம் ஆத்மி அரசு ஏழை மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க கடன்களை வழங்கி வருகிறது. இதுகுறித்து பட்ஜெட்டில் குறிப்பிட்டு பேசிய சிசோடியா, டெல்லியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரையிலான கல்வி கடன்களுக்கான உத்தரவாதங்களை உயர்கல்வி இயக்குநரகம் தொடர்ந்து வழங்கும். இதுதவிர, ஆண்டுக்கு 6 லட்சத்துக்கும் குறைவான வருமானம் ஈட்டும் குடும்பங்களை சார்ந்த குழந்தைகளுக்கு 100 சதவீதம் இலவசமாக வழங்கப்படும் பெல்லோஷிப் கட்டணம் திட்டத்தையும் அரசாங்கம் தொடரும் என தெரிவித்தார்….

The post டெல்லி ‘தேசபக்தி’ பட்ஜெட் 2021-2022: வரும் வெள்ளி முதல் 75 வாரம் சுதந்திரதின கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: