கேளம்பாக்கத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு: அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்பு

திருக்கழுக்குன்றம்: கேளம்பாக்கத்தில் இன்று மு.க.தமிழரசுக்கு சொந்தமான திருமண மண்டபம், மஹால், மினி ஹால் மற்றும் இருசக்கர வாகன விற்பனையகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். முன்னதாக, அவருக்கு கேளம்பாக்கம்-வண்டலூர் சாலை சந்திப்பில் காஞ்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை அருகே கேளம்பாக்கத்தில் மு.க.தமிழரசுக்கு சொந்தமான மோகனா மஹால், மோகனா திருமண மண்டபம், மோகனா மினி ஹால், மோகனா இருசக்கர வாகன விற்பனையகம் ஆகியவற்றின் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இவ்விழாவில் அனைவரையும் மு.க.தமிழரசு மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர்.இவ்விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று, இருசக்கர வாகன விற்பனையகம் உள்பட 3 மண்டபங்களையும் திறந்து வைத்தார். இதில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தா.மோ.அன்பரசன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பி.கே.சேகர்பாபு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, எம்பி-க்கள் டி.ஆர்.பாலு, ஜி.செல்வம், தமிழச்சி தங்கப்பாண்டியன், உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, கவிஞர் வைரமுத்து உள்பட பல்வேறு திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.முன்னதாக, இந்நிகழ்ச்சிக்கு வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேளம்பாக்கம்-வண்டலூர் சாலை சந்திப்பில் காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், ஊரகத் தொழில் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் தலைமையில், திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் எம்எல்ஏ-வுமான இதயவர்மன் முன்னிலையில், மேளதாளங்கள் முழங்க ஏராளமான திமுகவினர் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் கழகக்கொடிகளை பிடித்தபடி சிறப்பான வரவேற்பு அளித்தனர்.இதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் விஜயகுமார், ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் வாசுதேவன், தொகுதி தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் எக்ஸ்பிரஸ் எல்லப்பன் உள்பட ஏராளமான திமுக நிர்வாகிகள், அந்தந்த அணிகளின் பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்….

The post கேளம்பாக்கத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு: அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: