×

விவாகரத்துக்கு பிறகு சேர்ந்து வாழும் பிரியதர்ஷன், லிசி

சென்னை: இதுவரை பல்வேறு மொழிகளில் 98 படங்களை இயக்கி சாதனை படைத்துள்ள பிரியதர்ஷன், தனது 99வது படமாக இந்தியில் இயக்கியுள்ள படம், ‘பூத் பங்களா’. இதில் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். இயக்குனர் பிரியதர்ஷனும், நடிகை லிசியும் விவாகரத்துக்கு பிறகு மீண்டும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் திருமணம் கடந்த 1990ல் நடந்தது. 26 வருடங்கள் சுமூகமாக சென்ற அவர்களது வாழ்க்கையில் திடீரென்று விரிசல் ஏற்பட்டு, 2016ல் விவாகரத்து மூலம் அவர்கள் பிரிந்தனர். தற்போது அவர்களின் மகள் கல்யாணி பிரியதர்ஷன், முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.

இந்நிலையில், கருத்து வேறுபாடுகளால் பிரிந்து விவாகரத்து பெற்ற பிரியதர்ஷன், லிசி இருவரும் ஒருவரை தாக்கி ஒருவர் பேட்டி அளிக்கவில்லை. தங்கள் மகன் சித்தார்த் திருமணத்தை பிரியதர்ஷன், லிசி இணைந்து நடத்தினர். மலையாள இயக்குனர் சிபி மலயில் மகன் திருமணத்துக்கு அவர்கள் சேர்ந்து வந்தனர். சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த ‘பேட்ரியாட்’ என்ற படத்தின் டப்பிங்கில் பங்கேற்ற மம்மூட்டி, லிசிக்கு சொந்தமான டப்பிங் ஸ்டுடியோவில் தங்கியிருந்தார். அப்போது லிசி, பிரியதர்ஷன் இருவரும் மீண்டும் சேர்ந்துள்ள தகவலை அறிந்து, உடனே அவர்களை வரவழைத்து எடுத்துக்கொண்ட ஒரு போட்டோவை லிசி வெளியிட்டுள்ளார்.

Tags : Priyadarshan ,Lizzy ,Chennai ,Akshay Kumar ,Kalyani ,
× RELATED ட்ரோல்களை படித்துவிட்டு அழுதேன்; ஸ்ரீலீலா உருக்கம்