- இலங்கை
- கார்த்திக் சுப்பாராஜ்
- கார்த்திகேயன் சாந்தனம்
- ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ
- சோமீதரன்
- நவீன் சந்திரா
- சனந்த்
- ரூபா கொடுவாயூர்
- கபில வேணு
- கயல் வின்சென்ட்
- ரோஹித் கோகட்டே
- நவயுகா
- சிது குமரேசன்
- ஸ்வாதி கிருஷ்ணா
- வித்துவான்
- செல்வரத்னம் பிரதீபன்
- கே
- ராதா
சென்னை: ஸ்டோன் பென்ச் ஸ்டுடியோ சார்பில் கார்த்திகேயன் சந்தானம், கார்த்திக் சுப்பராஜ் இணைந்து தயாரித்துள்ள படம், ‘நீளிரா’. சோமீதரன் எழுதி இயக்கியுள்ளார். வரும் ஏப்ரல் 3ம் தேதி திரைக்கு வரும் இதில் நவீன் சந்திரா, சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, ‘கயல்’ வின்சென்ட், ரோஹித் கோகாட்டே, நவயுகா, சித்து குமரேசன், ஸ்வாதி கிருஷ்ணா, விது நடித்துள்ளனர். செல்வரத்னம் பிரதீபன் ஒளிப் பதிவு செய்ய, கே இசை அமைத்துள்ளார். மார்ட் டின் அரங்கம் அமைக்க, ராதா தர் எடிட்டிங் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் எண்டர் டெயின்மெண்ட், வெளிநாடுகளில் அஹிம்சா எண்டர்டெயின்மெண்ட் படத்தை வெளியிடுகின்றன. படம் குறித்து கார்த்திக் சுப்பராஜ் பேசுகையில், ‘இலங்கை போரை பற்றிய ஆவண படத்தை இயக்கிய சோமீதரன் ஊடகவியலாளரும் கூட. அவரது கதையை அவரேதான் எழுதியிருக்கிறார். இலங்கையில் போர் நடக்கும் பகுதியில், ஒரு திருமணம் எப்படி நடந்து இருக்கும் என்பதை சுவாரஸ்யங்களுடன், எதிர்பாராத சில திருப்பங்களுடன் சொல்லும் படம் இது’ என்றார்.
