×

அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு ஓகே சொல்லி இருக்கிறேன்: நடிகை பகீர்

ஐதராபாத்: தெலுங்கில் பல படங்களில் நடித்திருப்பவர் ஜோதி. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி, ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அவர் கூறியது: ஒரு கதாபாத்திரத்திற்கான தேர்வு, நடிகர்களின் திறமையை அடிப்படையாக கொண்டு இருக்கவேண்டும். தனிப்பட்ட நலன்களுக்காக அல்ல, தனிப்பட்ட விஷயங்கலை தொழிலுடன் சேர்க்கக்கூடாது. ஆனால் காஸ்ட்டிங் கோச் விவகாரம் சினிமாவில் இருக்கிறது. அட்ஜெஸ்ட்மென்ட் பற்றி என்னிடமும் கேட்டிருக்கிறார்கள். எனக்கு பிடித்தது என்றால் பிடிக்கும் என்று சொல்வேன், பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று சொல்வேன். இதனால் சில வாய்ப்புகளை பெற்றுள்ளேன். சிலவற்றை இழந்தும் இருக்கிறேன். அதற்கெல்லாம் நான் வருத்தப்பட்டதில்லை. எந்த நிலையிலும் நிலைகுலையாமல் இருப்பதே பெண்களை திரையுலகில் நிலைக்க வைக்கும். பாலியல் ரீதியான தொல்லைகள் எங்குதான் இல்லை. அதனால் அதற்காக களத்தில் இறங்கி போராட முடியாவிட்டாலும் எதை எதிர்க்க கற்றுக்கொண்டிருக்கிறேன். அதனால்தான் பல மாதங்களாக எனக்கு பட வாய்ப்பு இல்லை.

Tags : Bagheer ,Hyderabad ,Jyothi ,
× RELATED ட்ரோல்களை படித்துவிட்டு அழுதேன்; ஸ்ரீலீலா உருக்கம்