×

கல்யாணி பிரியதர்ஷன் போலவே இருக்கும் இளம்பெண்

சென்னை: இயக்குனர் பிரியதர்ஷன், நடிகை லிசி தம்பதியின் மகள் கல்யாணி பிரியதர்ஷன். இவர் தமிழில் சிவகார்த்திகேயனுடன் ‘ஹீரோ’, சிம்புவுடன் ‘மாநாடு’ படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு வெளியான இவரது ‘லோகா’ திரைப்படம், ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இப்போது ரவிமோகன் ஜோடியாக ‘ஜீனி’ படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் கல்யாணி பிரியதர்ஷன் போலவே ஒரு இளம்பெண் இருப்பதை ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் லா சாஸ்தவா என்ற பெயரில் இந்த பெண் வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ‘இவர் அச்சு அசலாக கல்யாணி பிரியதர்ஷன் போலவே இருக்கிறாரே’ என ஷாக் ஆகியுள்ள ரசிகர்கள், இவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

Tags : Kalyani Priyadarshan ,Chennai ,Priyadarshan ,Lisi ,Sivakarthikeyan ,Simbu ,Ravimohan ,Instagram ,La Sastava ,
× RELATED ட்ரோல்களை படித்துவிட்டு அழுதேன்; ஸ்ரீலீலா உருக்கம்