×

இந்திய ரசிகர்கள் 20 ஆண்டுகள் காத்திருந்த நிலையில் பாப் பாடகி ஷகிராவின் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து

 

புதுடெல்லி: கடந்த 2007ல் இந்தியாவில் தனது முதல் இசை நிகழ்ச்சியை பிரபல ‘பாப்’ பாடகி ஷகிரா நடத்தினார். அதற்கு பிறகு சுமார் 20 ஆண்டுகள் கழித்து, 2026ம் ஆண்டில் மீண்டும் இந்தியாவுக்கு வருவதற்கு அவர் திட்டமிட்டு இருந்தார். ஊட்டச்சத்து குறைபாடுகள் கொண்ட குழந்தைகளுக்கு உதவி செய்யும் ‘பீடிங் இந்தியா’ என்ற அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பதாக இருந்தது. இதற்காக மும்பை மற்றும் டெல்லியில் பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.

இந்நிலையில், திடீரென்று ஷகிராவின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அதன் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘அமெரிக்கா, ஈரான் இடையிலான போர் பதற்றம் மற்றும் மேற்கு ஆசிய வான்வெளியில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற சூழ்நிலை காரணமாக, வரும் ஏப்ரல் 10ம் தேதி மும்பையிலும், 15ம் தேதி டெல்லியிலும் நடக்கவிருந்த ஷகிராஇசை நிகழ்ச்சிகள் வேறு தேதிகளில் மாற்றப்பட்டுள்ளன’ என்றனர்.

 

Tags : Shakira ,New Delhi ,India ,Beating India ,Mumbai ,Delhi ,
× RELATED உடல் எடையை குறைத்த தமன்னா