நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.17,899 கோடி நிதி ஒதுக்கீடு சென்னை விமானநிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு

* ரூ.623.59  கோடியில் 1,000 புதிய பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கீடு* 59 நகராட்சிகளுக்கு புறவழிச்சாலைகள் அமைக்கப்படும்சென்னை: தமிழக அரசின் பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:* அடுத்த 10 ஆண்டுகளில் மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட தலைமையகத்துடன் இணைக்கக்கூடிய 2,200 கி.மீ சாலைகளை 4 வழிச் சாலைகளாகவும், வட்ட தலைமையகத்தை இணைக்கும் 6,700 கி.மீ ஒற்றை மற்றும் இடைநிலை வழிச் சாலைகளை இரட்டை வழி நெடுஞ்சாலைகளாகவும் மேம்படுத்துவதே அரசின் நோக்கம்.  * ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் சென்னை கன்னியாகுமரி தொழில் பெருவழித் திட்டத்தின் கீழ், ரூ.6,448.24 கோடி மொத்த செலவில், 589 கி.மீ நீளமுள்ள 16 மாநில நெடுஞ்சாலைப் பெருவழிகள் மேம்படுத்தப்படும். நெடுஞ்சாலைத் துறையின் ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடு ரூ.17,899.17 கோடியாக இருக்கும்.* அரசுப் பேருந்துகளில் 2010-11ல் 2.08 கோடியாக இருந்த தினசரி பயணிகளின் எண்ணிக்கை, 2019-20ல் கோவிட் பெருந்தொற்றுக்கு முன்னரே 1.31 கோடியாக குறைந்துள்ளது வருந்தத்தக்கது. அனைத்து அண்டை மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கினும், தமிழ்நாட்டில் உள்ள நகர மற்றும் புறநகர் பேருந்து சேவைகளுக்கான கட்டணம் மிகக் குறைவாக இருக்கும் சூழலிலும், இவ்வாறு நிகழ்ந்துள்ளது.  மிகவும் பழைய பேருந்துகள் மற்றும் மிக அதிக மேல்நிலைச் செலவுகள் உட்பட, பல காரணிகளால் மாநில போக்குவரத்து நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது.* மாநிலத்தில் உள்ள வெண்பலகை கொண்ட நகரப் பேருந்துகளில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் இலவசமாக பயணிக்கலாம் என முதல்வர் அறிவித்திருந்தார். இந்த நோக்கத்திற்காக, ரூ.703 கோடி   மானியமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.50 கோடி டீசல் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. ரூ.623.59 கோடியில் ஜெர்மன் வளர்ச்சி வங்கி உதவியுடன் 1,000 புதிய பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. * போக்குவரத்து நிறுவனங்கள் சிக்கனமாக செயல்படுவதை உறுதி செய்வதற்கும், விதிமுறை அடிப்படையிலான செயல்திறன் குறியீடுகளின் இலக்கை அடைவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். இலவச அல்லது மானியம் அளிக்கப்பட்ட பேருந்து பயணம் வேண்டுமென அரசு விரும்பும் இனங்களில், நெறிசார் செலவு அளவுருக்களின் அடிப்படையில் வெளிப்படையான மானியம் வழங்கப்படும். இந்த புதிய முறை நடப்பு நிதியாண்டில் அமல்படுத்தப்படும்.* சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் தொடங்கப்பட்டுள்ளது. ஒன்றிய நிதி அமைச்சரின் வரவு-செலவுத் திட்ட உரையில் ஏற்கனவே உறுதியளிக்கப்பட்டவாறு, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு பங்கு மூலத்தனத்திற்கான விரைந்த முறையான ஒப்புதலை வழங்குமாறும் அதற்கு இணையான ஒன்றிய அரசின் பங்கினை விரைந்து வழங்குமாறும் ஒன்றிய அரசினை இந்த அரசு வலியுறுத்தும். மெட்ரோ ரயில் திட்டத்தின் கோடம்பாக்கம் முதல் பூந்தமல்லி புறவழித்தடத்திற்கான சேவைகள், 2025ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அதாவது நான்கு ஆண்டுகளுக்குள் தொடங்கும். மெட்ரோ ரயில் திட்டத்தின் மொத்த இரண்டாம் கட்டமும் 2026ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும்.  அதே நேரத்தில், மெட்ரோ ரயில் திட்டத்தை, தாம்பரம் வழியாக விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை நீட்டிக்கும் பணியை இந்த அரசு விரைவாகத் தொடங்கும். மேலும், கோயம்புத்தூரில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமைப்பது குறித்து ஒன்றிய அரசுடன் கலந்தாலோசித்து விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கைகள் தயார் செய்யப்படும்….

The post நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.17,899 கோடி நிதி ஒதுக்கீடு சென்னை விமானநிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: