இசக்கி கார்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, மூணாறு ரமேஷ், சுப்பிரமணியம் சிவா, பூஜா மோகன்ராஜ், கதா நந்தி, சுர்ஜித் கோபிநாத், வித்யா விஜயகுமார், யஷ்வந்த், சந்தானலட்சுமி, மீனாட்சி அய்யர் நடித்துள்ள படம், ‘சைலப்பன் சைக்கிள் மார்ட்’. சுகா கதை எழுதி இயக்க, இளையராஜா இசை அமைத்துள்ளார். இதன் பர்ஸ்ட் லுக்கை வெற்றிமாறன் வெளியிட்டார். லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிக்க, கிராமத்து பின்னணியில் முழுநீள ஃபேமிலி எண்டர்டெயினராக படம் உருவாகியுள்ளது.
ஒரு சைக்கிள் சக்கரத்தை மையமாக வைத்து, தென்தமிழகத்து கிராமத்தில் வசிக்கும் மனிதர்களையும், வாழ்க்கை சம்பவங்களையும் காமெடியுடன் படம் சொல்கிறது. மார்ட்டின் டான்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஏ.என்.இளங்கோவன் அரங்கம் அமைத்துள்ளார். சுரேஷ் அர்ஸ் எடிட்டிங் செய்ய, கனல் கண்ணன் சண்டைப் பயிற்சி அளித்துள்ளார்.
