- பிரஜின்
- ஜனனி
- சென்னை
- ராமகிருஷ்ணன் ஆறுமுகம்
- ARK புரொடக்ஷன்ஸ்
- வினோத் பெருமாள்
- ஈகோப்மின் மோஷன் பிக்சர்ஸ்
- புகுல்
- விக்ரம் விஜய்
- Ravimaria
- மிம்கோபி
- தீபா அக்கா
- அபிதா
- ஸ்ரீகாந்த்
சென்னை: ஏஆர்கே புரொடக்ஷன்ஸ் சார்பில் ராமகிருஷ்ணன் ஆறுமுகம் மற்றும் எகோப்மின் மோஷன் பிக்சர்ஸ் சார்பில் வினோத் பெருமாள் இருவரும் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு ‘ஊருக்கு ரெண்டு ஊதாரி’ என்று கலகலப்பான தலைப்பை வைத்துள்ளனர். பிரஜின், புகழ் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். ‘லியோ’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜனனி இந்தப் படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார்.
இவர்களுடன் விக்ரம் விஜய் முக்கியம் கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். மற்றும் ரவிமரியா, மைம்கோபி, தீபா அக்கா, அபிதா ஆகியோர் நடிக்கிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இந்த படத்திற்கு இசையமைக்க, பாடல் வரிகளை கவிஞர் சினேகன் எழுதுகிறார்.பியார் பிரேமா காதல், கழுகு 2, நான் மிருகமாய் மாற, நினைவெல்லாம் நீயடா போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தொகுப்பை செந்தமிழ் செல்வன் செய்ய, படத்துவக்க விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர் விஜய்சேதுபதி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, சி.வி.குமார், கேகேஆர் சினிமாஸ் கே. ரமேஷ் பாண்டியன், இயக்குனர் சுப்ரமணியசிவா ஆகியோர் கலந்துகொண்டு படத்தை துவக்கி வைத்தனர்.

