- மாதவன்
- கௌதம் ராம் கார்த்திக்
- சென்னை
- அபிஷேக் பானர்ஜி
- நிமிஷா சஜயன்
- குல்ஷன் தேவையா
- சாருகேஷ் சேகர்
- கல்யாண் சுப்பிரமணியன்
- ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோஸ்
- மும்பை
சென்னை: மாதவன், கவுதம் ராம் கார்த்திக், அபிஷேக் பானர்ஜி, நிமிஷா சஜயன், குல்ஷன் தேவய்யா நடிக்கும் படம், ‘லெகஸி’. சாருகேஷ் சேகர் இயக்குகிறார். ஸ்டோன் பென்ச் ஸ்டுடியோ சார்பில் கல்யாண் சுப்பிரமணியன் தயாரிக்கிறார். திடீர் வீழ்ச்சியை சந்தித்த வயதான கேங்ஸ்டர் மாதவன், தனது அதிகாரத்தையும், குடும்பத்தையும், பாரம்பரிய மரபையும் மீட்டெடுக்க முன்வருகிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.
மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் ‘லெகஸி’ அணியினர் கூறுகையில், ‘இப்படம் எங்கள் குழுவினருக்கு முக்கியமான ஒரு சாப்டர். அதிகாரம், வெற்றி மற்றும் உணர்வுப்பூர்வமான சில விஷயங்களை எங்கள் கதாபாத்திரத்தின் மூலம் ஆழமாக உணர்ந்து நடித்தோம். குற்ற உலகை பின்னணியாக கொண்ட கதையில், விட்டுச்சென்ற பாரம்பரியத்தின் மரபு மற்றும் தனது எதிர்காலத்துக்காக ஆசை, விசுவாசம் மற்றும் குடும்ப உறவுகளுடன் எப்படி மோதுகிறது என்பதை படம் பேசும். இந்த ஆண்டில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படத்தை பார்க்கலாம்’ என்றனர்.

