
தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகை திவி, நவீன் சந்திரா நடிப்பில் வெளியான ‘ஹனி’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில், ‘சமீபத்தில் ஒரு ‘பப்’புக்கு சென்றேன். அப்போது எனது பாதுகாவலரும் உடனிருந்தார். எனினும், அங்கிருந்த மர்ம நபர் ஒருவர் எனது இடுப்பில் கைவைத்தார். உடனே அவரை கடுமையாக தாக்கிவிட்டு வெளியேறினேன். அன்று எனக்கு வசதியான டிசர்ட் மட்டுமே அணிந்திருந்தேன். அணியும் ஆடையில் ஆபாசம் இருப்பதாக நினைத்தால், அணிய வேண்டிய அவசியம் இல்லை.
ஒரு ஆடை உங்களுக்கு தர்மசங்கடமாக இருந்தால், அதை ஏன் அணிய வேண்டும்? மற்றொருவர் அணியும் ஆடையை பார்க்க தர்மசங்கடமாக இருந்தால், அதை ஏன் பார்க்கிறீர்கள்? எங்களுக்கு விருப்பமான ஆடைகளை அணிய யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று பதிலடி கொடுத்தார்.

