சென்னை: சாருலதா பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஆர் .பாரதி கதை எழுதி இயக்கியிருக்கும் படம் ‘ட்ரீம் கேர்ள்’. இப்படத்தில் ஜீவா நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக ஹரிஷ்மிதா நடித்திருக்கிறார். மற்றும் பிரபு சாஸ்தா, துருவன், இந்திரா ஆகியோரும் நடித்துள்ளனர். படம் பற்றி இயக்குநர் எம்.ஆர்.பாரதி பேசும்போது, ‘‘இது ஒரு காதல் கதை. கதாநாயகனுக்கு சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்பது கனவு.
கதாநாயகிக்கோ தான் ஒரு பாடகியாக வேண்டும் என்று கனவு. இப்படி இருவரும் கனவைத் துரத்திக் கொண்டிருக்கிறார்கள். மற்றபடி இருவருமே ஜாலியாக வாழ்க்கையை, அதன் போக்கில் போகவிட்டு மகிழ்ச்சியின் தருணங்களை ஒரு சொட்டு கூட வீணடிக்காமல் வாழத் துடிப்பவர்கள். ‘ட்ரீம் கேர்ள்’ படத்தின் கதை அழுத்தமாக இருப்பதால் ஒரே ஒரு பாடல் மட்டுமே இடம்பெற்றுள்ளது.
காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதியன்று இந்தப் படம் வெளியாகிறது. சரியாகத் திட்டமிட்டால் 25 லட்ச ரூபாயில் ஒரு நல்ல படம் எடுக்க முடியும். நல்ல படம் ஓடினால் அது பெரிய படம். ஆனால் அதே படத்துக்கு இரண்டு கோடி செலவழிக்கிறார்கள்’’ என்றார். என்.காவேரி மாணிக்கம், டாக்டர் ஆர்.குணசேகரன், பி.ஆதித்யன் இணை தயாரிப்பு செய்துள்ளனர்.

