திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் தரிசனம் 3 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அறிவித்துள்ளார். இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக அரசால் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு பக்தர்களின் பாதுகாப்பு முன்னேற்பாடுகளின் தொடர் நடவடிக்கையாக நிலையான வழிகாட்டி நெறிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி 1.8.2021 முதல் 3.8.2021 வரை வேதகிரீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. எனினும், திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் சுவாமிக்கு ஆகம விதிகளின்படி அனைத்து பூஜைகளும் வழக்கம்போல் நடைபெறும். எனவே பொதுமக்களும், பக்தர்களும் கோயில் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….
The post கொரோனா தொற்று காரணமாக வேதகிரீஸ்வரர் கோயில் மூடல் appeared first on Dinakaran.