விசைத்தறி தொழிலில் சிறந்த தொழிலாளி என்று புகழ்பெற்ற சக்திவேல் நாகப்பனுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று, அவரது அம்மா கடவுளை வேண்டுகிறார். இந்நிலையில் அங்கு ஹெலன் பணியில் சேருகிறார். அவரும், சக்திவேல் நாகப்பனும் காதலித்தாலும் அதை சொல்லாமல் இருக்கின்றனர். விசைத்தறி பட்டறை முதலாளி ‘சித்தா’ தர்ஷன் ஹெலனை திருமணம் செய்ய முயற்சிக்க அதன் பிறகு நடப்பது மீதி கதை. சக்திவேல் நாகப்பன் தயாரித்து இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். சிலம்பம் சுற்றுவது, மனைவிக்காக உருகுவது, கடன் வாங்கி கஷ்டப்படுவது என்று நவரச நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
ஹெலன் இயல்பாக நடித்துள்ளார். மற்றும் ‘சித்தா’ தர்ஷன், சாப்ளின் பாலு, சந்திரன், கிருஷ்ணன், முத்துராஜா, பம்பாய் சுப்பிரமணி, கல்பனா, வசந்தி, ஜெயஸ்ரீ, ரத்னா, செல்லம்மா உள்பட அனைவரும் அந்தந்த கேரக்டராக திரையில் வாழ்ந்துள்ளனர். இயற்கை வெளிச்சத்தில் கிராமத்தின் அழகை ஒளிப்பதிவாளர் வெற்றி கண்முன் கொண்டு வந்துள்ளார். எடிட்டர் லோகேஷின் பணியும் மற்றும் மணி கிருஷ்ணனின் பின்னணி இசையும், பாடல்களும் கூடுதல் பலம் சேர்த்துள்ளன. பாசிட்டிவ் விஷயத்தை பாசிட்டிவாக அணுகியிருப்பது இயக்குனர் சக்திவேல் நாகப்பனை வித்தியாசப்படுத்துகிறது. கிராமத்து வாழ்வியலை இயல்பாக சொல்லும் இப்படத்தின் நீளத்தை குறைத்திருக்க வேண்டும்.
