×

தமிழுக்கு வரும் பெமினா ஜார்ஜ்

ஏகன் நடிக்கும் ‘ஹைக்கூ’ என்ற படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது. தற்போது இடுக்கியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இயக்குனர் ராம் ‘கிளாப்’ அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். யுவராஜ் சின்னசாமி இயக்குகிறார். விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி.அருளானந்து, மேத்யூ அருளானந்து தயாரிக்கின்றனர். ’ஜோ’ என்ற படத்தின் இயக்குனர் ஹரிஹரன் ராம் கூடுதல் திரைக்கதை எழுதுகிறார். ‘ஜோ’, ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ ஆகிய படங்களில் நடித்த ஏகன் ஹீரோவாக நடிக்கிறார்.

மலையாளத்தில் ‘மின்னல் முரளி’, ‘தீப்பொறி பென்னி’, ‘சேஷம் மைக்-இல் பாத்திமா’ ஆகிய படங்களில் நடித்த பெமினா ஜார்ஜ், தெலுங்கில் ’கோர்ட்: ஸ்டேட் வெர்சஸ் எ நோபடி’ என்ற படத்தில் நடித்த ஸ்ரீதேவி அப்பல்லா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்கிறார். ‘’கோர்ட்: ஸ்டேட் வெர்சஸ் எ நோபடி’, ’பேபி’ ஆகிய படங்களை தொடர்ந்து விஜய் பல்கானின் இசை அமைக்கிறார். சக்தி பிரனேஷ் எடிட்டிங் செய்கிறார்.

Tags : Femina George ,Netflix ,Egan ,Idukki ,Ram ,Yuvaraj Chinnaswamy ,Dr. ,T. Arulanandhu ,Mathew Arulanandhu ,Vision Cinema House ,Hariharan Ram ,
× RELATED திரைவி விமர்சனம்