×

ஹீரோவுடன் ஏற்பட்ட திடீர் நட்பு

மதன் இயக்கத்தில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் ஜோடியாக ‘வித் லவ்’ என்ற படத்தில் நடிக்கும் மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் கூறுகையில், ‘மதன் என்னிடம் கதை சொல்ல வரும்போது, ஒரு காட்சியை படமாக்கி காட்டினார். அது எனக்கு மிகவும் பிடித்தது. உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். இப்படத்தில் நடித்த காவ்யாவை தமிழ் ரசிகர்கள் கண்டிப்பாக கொண்டாடுவார்கள். இந்த படக்குழு என்னை நிறைய சிரிக்க வைத்தது.

தமிழ் படவுலகமும், சென்னை மாநகரமும் எனக்கு இன்னும் அதிகமாக பிடிக்க காரணமாக இருந்தது. சவுந்தர்யா ரஜினிகாந்த் என்மீது ஒரு அக்கா போல் அன்பு செலுத்தி ஆதரவு கொடுத்தார். எனக்கு மதன் கொடுத்த மோனிஷா கேரக்டர் மிகவும் பிடிக்கும். மோனிஷா, சத்யா இடையிலான கெமிஸ்ட்ரி திரையில் ஒர்க்கவுட் ஆனதற்கு காரணம், திரைக்கு வெளியே அபிஷன் ஜீவிந்துடன் எனக்கு இருந்த நட்புதான். வரும் 6ம் தேதி படம் வெளியாகிறது’ என்றார்.

Tags : Anaswara Rajan ,Abhishan Jeevindh ,Madhan ,Kavya ,Chennai ,
× RELATED திரைவி விமர்சனம்