- சென்னை
- சோனியா அகர்வால்
- கே. பாக்யராஜ்
- லிவிங்ஸ்டன்
- ஜோவிதா
- அயலி மதன்
- அமுதவாணன்
- ஆதர்ஷ்
- ரஃபீக் பச்சா
- கே. எஸ். கிஷன்
- விக்னேஷ் ராஜா
- சங்கீத் மணிகோபால்
- லோகேஸ்வரன்
- பயோவன் படைப்புவாதம்
- Gopichettipalayam
சென்னை: ‘டார்க் ஜெயின்ட்’ திரைப்படத்தின் டைட்டில் வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இத்திரைப்படத்தில் சோனியா அகர்வால், இயக்குனர் கே.பாக்யராஜ், லிவிங்ஸ்டன், லிவிங்ஸ்டன் மகள் ஜோவிட்டா, அயலி மதன், அமுதவாணன், ஆதர்ஷ், ஆகியோருடன் ரபிக் பாட்சா முக்கிய கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறார். இத்திரைப்படத்தை கே.எஸ்.கிஷன் இயக்குகிறார். விக்னேஷ் ராஜா இசையமைக்க, ஒளிப்பதிவு சங்கீத் மணிகோபால் கவனிக்கிறார். இப்படத்தினை ஓய்வு பெற்ற ராணுவ வீரர் லோகேஸ்வரன், பயோவன் கிரியேஷனிசம் எனும் பேனரில் தயாரிக்கிறார். முதல்கட்ட படப்பிடிப்பு கோபி செட்டிபாளையம், சென்னையில் முடிந்துள்ளது. அடுத்தகட்டமாக இம்மாதம் இரண்டாவது வாரத்தில் துவங்கும். இது ஹாரர் திரில்லர் கதையாக உருவாகிறது. படப்பிடிப்பு நிறைவடைந்ததும் ஏப்ரல் மாதம் படம் வெளியாக உள்ளது.
