முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனாவை ‘நேஷனல் கிரஷ்’ என்று ரசிகர்கள் புகழ்கின்றனர். பல்வேறு மொழிகளில் நடித்து கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் அவர், திரைப்பட விழா, விளம்பர நிகழ்ச்சி மற்றும் பொதுவெளியில் ரசிகர்களிடம் அன்புடன் பேசுகிறார். குறிப்பாக, விமான நிலையத்துக்கு செல்லும் அவரை விதவிதமாக போட்ேடா எடுக்க போட்டோகிராபர்கள் சூழ்ந்துகொள்வது வழக்கம். அவர்கள் விரும்பியபடி போஸ் கொடுத்து, அங்குள்ள பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்கும் அவர், சமீபத்தில் விமான நிலையத்தில் செய்த கலாட்டா, போட்டோகிராபர்கள் மனதை நெகிழவைத்துள்ளது. வெளியூர் செல்வதற்காக விமான நிலையத்துக்கு வந்த ராஷ்மிகா மந்தனாவை போட்டோகிராபர்கள் சூழ்ந்துகொண்டனர்.
அப்போது ஒரு போட்டோகிராபருக்கு பிறந்தநாள் என்று தெரிந்ததும் அவரது பக்கம் திரும்பிய ராஷ்மிகா மந்தனா, அவரை அன்புடன் கட்டியணைத்து, ‘காட் பிளஸ் யூ’ என்று வாழ்த்திவிட்டு, ‘இது உங்களுக்கு எத்தனையாவது பிறந்தநாள்?’ என்று கேட்டார். ‘24 வயது’ என்று சொல்லி போட்டோகிராபர் வெட்கப்பட்டார். உடனே ராஷ்மிகா மந்தனா, ‘அய்யோ… 24தானா?’ என்றபடி ஒரு க்யூட்டான ரியாக்ஷனை வெளிப்படுத்தியபடி அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இன்ப அதிர்ச்சி அடைந்த போட்டோகிராபர், சில நிமிடங்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.
