×

தனுஷ் ஜோடியாக ஸ்ரீலீலா

சென்னை: தனுஷ் நடித்து வரும் 55வது படம் குறித்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த ‘அமரன்’ என்ற ஹிட் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்குவார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் வெளியான அறிவிப்பின்படி, தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர் டேக் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு சாய் அபயங்கர் இசை அமைப்பதாக தெரிவிக்கப்பட்டது.

தற்போது தனுஷ் ஜோடியாக ஸ்ரீலீலா நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. தெலுங்கு முன்னணி நடிகை ஸ்ரீலீலா, சமீபத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த ‘பராசக்தி’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தற்போது தனுஷ் ஜோடியாக நடிக்கிறார்.

Tags : Srileela ,Dhanush ,Chennai ,Rajkumar Peryasami ,Shivakarthikeyan ,Sai Pallavi ,Chai Abayankar ,Wunderbar Films ,R Tag Studios ,
× RELATED மகனை ஹீரோவாக இயக்கும் தனுஷ்