- ஜீவா உருக்கம்
- சென்னை
- நிதீஷ் சஹாதேவ்
- ஜீவா
- கண்ணன் ரவி
- தீபக் ரவி
- கண்ணன் ரவி குழுமம்
- தம்பி ராமையா
- இளவரசு
- பிரதானா நாதன்
- ஜென்சன் திவாகர்
- விஷ்ணு விஜய்
- Kumuli
சென்னை: நிதிஷ் சஹாதேவ் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான படம், ‘தலைவர் தம்பி தலைமையில்’. கண்ணன் ரவி குழுமம் சார்பில் கண்ணன் ரவி, தீபக் ரவி இணைந்து தயாரித்துள்ள இதில் தம்பி ராமய்யா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜென்சன் திவாகர் நடித்து இருந்தனர். விஷ்ணு விஜய் இசை அமைத்திருந்தார். இப்படத்தின் வெற்றிவிழாவில் பங்கேற்ற ஜீவா, உருக்கமாக பேசியதாவது: குமுளி மக்களுக்கு நன்றி. படம் வெற்றிபெற வேண்டும் என்று, சாமி கும்பிட்டு கிடா வெட்டினர்.
ஷூட்டிங் முடியும்போது அழுதனர். இதுநாள்வரை நாங்கள் இவ்வளவு சந்தோஷமாக இருந்தது இல்லை என்று, எங்கள் படக்குழுவினரிடம் சொன்னார்கள். அதை நினைக்கும்போது மனம் குளிர்ந்தது. அதில் ஒரு நடிகர், ‘உங்களுக்கு கோடி நன்றி. இந்த ஒரு படத்தால் எனது பிள்ளைக்கு நல்லபடியா கல்யாணம் பண்ணி வெச்சிடுவேன்’ என்று டைரக்டரிடம் சொன்னார். அதை கேட்டதும் நான் கண்கலங்கிவிட்டேன். எனக்கு வெற்றிப் படம் கொடுத்த நிதிஷ் சஹாதேவுக்கு நன்றி.
