விஜய் சேதுபதி நடிக்கும் காதல் கதை சொல்லவா

சென்னை: ஜெயராம், விஜய் சேதுபதி, நகுல், ஆத்மியா, ரித்திகா சென், ரமேஷ் திலக் நடித்துள்ள படம், ‘காதல் கதை சொல்லவா’. வரும் பிப்ரவரி 6ம் தேதி திரைக்கு வருகிறது. பெப்பர்மின்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஆகாஷா அமையா ஜெயின் மலையாளம் மற்றும் தமிழில் தயாரித்துள்ளார். கண்மணி ராஜா முகமது வசனம் எழுத, ஷாஜன் களத்தில் ஒளிப்பதிவு செய்துள்ளார். எம்.ஜெயச்சந்திரன், சரத் இசை அமைத்துள்ளனர்.

கண்மணி ராஜா முகமது, முத்தமிழ், கவிதா ரவி, கே.பார்த்திபன் பாடல்கள் எழுதியுள்ளனர். சி.பிரசன்னா, சுஜித், ஜி.பிரவீன் நடனப் பயிற்சி அளித்துள்ளனர். ஜீவன் எடிட்டிங் செய்ய, சிவா யாதவ் அரங்கம் அமைத்துள்ளார். டி.ரமேஷ் சண்டைப் பயற்சி அளிக்க, சனில் களத்தில் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். மனிதநேயத்தை வலியுறுத்தும் இக்கதை மூன்று கோணங்களில் சொல்லப்படுகிறது.

இயக்குனர் சனில் கூறுகையில், ‘தமிழில் படம் இயக்குவது எனது கனவாக இருந்தது. மலையாளிகளின் கனவு தேசமாக தமிழ்நாடு இருக்கிறது. நான் உதவியாளராக இருந்தபோது பிரசாத் லேப் வந்திருக்கிறேன். மீண்டும் இங்கே எனது படத்துக்காக வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. திரையுலகில் வெற்றி, தோல்வியோ அல்லது மலையாளம், தமிழ் என்ற மொழியோ முக்கியம் இல்லை. திறமைதான் முக்கியம். நான் இயக்கும் படத்தால், அதன் தயாரிப்பாளர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம்’ என்றார்.

Related Stories: