ஆஸ்கர் வரலாற்றில் முதல் முறை 16 பிரிவுகளில் போட்டியிடும் சின்னர்ஸ்

லாஸ்ஏஞ்சல்ஸ்: 2026ம் ஆண்டுக்கான ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெறும் படங்களின் பட்டியல் நேற்று முன்தினம் இரவு வெளியானது. 98 ஆண்டுகளுக்கு மேலான ஆஸ்கர் வரலாற்றில் இதுவரை எந்தவொரு திரைப்படமும் செய்யாத சாதனையை ‘சின்னர்ஸ்’ ஹாலிவுட் படம் நிகழ்த்தியுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் பரிந்துரைகள் இன்று (ஜனவரி 22) வெளியிடப்பட்டன.

இதில் ‘சின்னர்ஸ்’ மொத்தம் 16 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு சாதனை படைத்தது. இதற்கு முன்பு ‘ஆல் அபௌட் ஈவ்’ (1950), ‘டைட்டானிக்’ (1997) மற்றும் ‘லா லா லேண்ட்’ (2016) தலா 14 பரிந்துரைகளைப் பெற்றிருந்தன. இந்த மியூசிக்கல் த்ரில்லர் திரைப்படத்தில் மைக்கேல் பி ஜோர்டான் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

1930-களில் அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி மாகாணத்தில் நிலவிய இனவெறி பின்னணியை மையமாக வைத்து வெளியான இப்படத்தில், ரத்தம் குடிக்கும் டிராகுலாவின் கதைக்களம் சிக்கலான முறையில் காட்சியாக்கப்பட்டுள்ளது. சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் உள்ளிட்ட பல முக்கிய பிரிவுகளில் போட்டியிடும் இப்படம் ஏற்கனவே ரசிகர்களை கவர்ந்திருந்தது. ஆஸ்கர் விருது விழா வரும் மார்ச் 15ம் தேதி லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

Related Stories: