சென்னை: ‘அமரன்’ இயக்குனரான ராஜ்குமார் பெரியசாமியுடன் கூட்டணி அமைத்துள்ளார் தனுஷ். இவருடைய இயக்கத்தில் அடுத்ததாக நடிக்கவுள்ள நிலையில், விரைவில் இப்படத்தின் ஷுட்டிங் துவங்கும் என சொல்லப்படுகிறது. இந்த காம்போ படப்பிடிப்பு துவங்கும் முன்பே எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. இந்நிலையில் D55 பற்றி புதிய அறிவிப்பு ஒன்றினை படக்குழு வெளியிட்டுள்ளது.
தனுஷ் அடுத்ததடுத்து இளம் இயக்குனர்களுடன் கூட்டணி அமைத்து வருகிறார். அந்த வகையில் இரண்டே படங்களே இயக்கியுள்ள ராஜ்குமார் பெரியசாமியுடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தினை ஆர்டேக் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
