தமிழ் நடிகைகளுக்கு நடிக்க தெரியாது: மாளவிகா மோகனன் சர்ச்சை ரசிகர்கள் கொந்தளிப்பு

சென்னை: மலையாள திரையுலகில் பிரபலமான ஒளிப்பதிவாளர் மோகனின் மகள் என்ற அடையாளத்துடன் மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமானவர் தான் மாளவிகா மோகனன்.
ரஜினியை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர் விஜய்யின் மாஸ்டர், தனுஷுடன் மாறன், பா.ரஞ்சித் இயக்கிய தங்கலான் என தொடர்ந்து நடித்தார். சமீபத்தில் மாளவிகா மோகனன் ஒரு பேட்டியில் தமிழ் நடிகைகள் பற்றி பேசிய விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர், ‘‘தமிழ், தெலுங்கு நடிகைகள் சிலர் சரியாக நடிப்பதில்லை. சோக காட்சிகளில் அவர்கள் மனதுக்குள் 1,2,3,4 என எண்ணிக்கொண்டு சோகமான முக பாவனைகளை வெளிப்படுத்துகிறார்கள்.

கோப காட்சிகள் என்றால் ஏ,பி,சி,டி என சொல்லிக்கொண்டு ஒரே மாதிரி நடிக்கிறார்கள். அவர்கள் தங்களது உதட்டசைவை மட்டும் சரியாக செய்து டப்பிங்கில் பார்த்துக்கொள்கிறார்கள். ஒரு படத்துக்கு மட்டும் அவர்கள் இப்படி செய்வதில்லை; தங்கள் கரியர் முழுவதும் இதையே செய்கிறார்கள் என்றார். அவரது இந்த பேச்சு தமிழ் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ‘‘நீங்க எந்த படத்தில் ஒழுங்கா நடிச்சிருக்கீங்க. ஒரு விருதாவது வாங்கி இருக்கீங்களா? சாய் பல்லவி, சமந்தா, திரிஷா எல்லாம் எங்க ஊர்தான். அவங்கிட்ட நீங்க நடிப்பை கத்துக்குங்க’’ என ரசிகர்கள் பலரும் சோஷியல் மீடியாவில் சூடாக கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

Related Stories: