சென்னை: தமிழில் வெளியான ‘மத்திய சென்னை’, ‘காட்டுப்பய சார் இந்த காளி’, ‘தீர்க்கதரிசி’, ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் நடித்திருந்த ஜெய்வந்த், தற்போது வெளியாகி ஹிட்டான ‘தலைவர் தம்பி தலைமையில்’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘மத்திய சென்னை’ படத்தில் அறிமுகமான நான், ‘காட்டுப்பய சார் இந்த காளி’ என்ற படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்தேன்.
தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்’ என்ற படத்தை வெற்றிமாறன் இயக்கியபோது அவரிடம் வாய்ப்பு கேட்டிருந்தேன். அதை ஞாபகத்தில் வைத்து ‘விடுதலை 2’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வைத்தார். மலையாள இயக்குனர் நிதிஷ் சஹாதேவ் படமான ‘தலைவர் தம்பி தலைமையில்’ வெளியாகி ஹிட்டான பிறகு என்னைத்தேடி நிறைய வாய்ப்புகள் வருகிறது.
ஹீரோவா, வில்லனா, குணச்சித்திர நடிப்பா என்று எதையும் நான் யோசிக்கவில்லை. தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். மீண்டும் படம் தயாரித்து நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. ஜீவா, நிதிஷ் சஹாதேவ் ஆகியோருக்கு நன்றி. இனி எனது படங்களின் இடைவெளி இருக்காது. இந்த ஆண்டில் அதிக படங்களில் நடிப்பேன். மற்ற மொழிகளில் இருந்தும் அழைப்புகள் வருகிறது. எனக்கு பொருத்தமான கேரக்டர்களை தேர்வு செய்து நடிப்பேன்.
