சென்னை: ‘தேன்’ என்ற படத்தின் மூலம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ள கணேஷ் விநாயக், அடுத்து எழுதி இயக்கிய படம், ‘அருள்வான்’. இதில், ‘தகராறு’ படத்துக்கு பிறகு மீண்டும் அருள்நிதி, கணேஷ் விநாயக் இணைந்துள்ளனர். மிகவும் வித்தியாசமான கேரக்டரில் அருள்நிதி நடிக்க, முக்கிய வேடங்களில் ஆரவ், ரம்யா பாண்டியன், காளி வெங்கட் நடித்துள்ளனர். ‘மைனா’ எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இப்படத்தையும் ‘தேன்’ படத்தை போல் பல்வேறு நாடுகளில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி வைப்பதற்கு கணேஷ் விநாயக் முடிவு செய்து இருக்கிறார். ‘மை டியர் சிஸ்டர்’, ‘டிமான்ட்டி காலனி 3’, ’அருள்வான்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள அருள்நிதி, மேலும் சில புதுப்படங்களில் நடிப்பதற்கு தீவிரமாக கதை கேட்டு வருகிறார்.
