வேலைவாய்ப்புக்கு உதவி செய்யும் விஜய் சேதுபதி

சென்னை: கடந்த பத்து வருடங்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் நன்றாக படித்த இளைஞர்களுக்கு உதவி செய்து வரும் வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை இயக்கம், தற்போது இதை கட்டணம் இல்லாத மனிதநேய சமூக சேவையாக மாற்றியிருக்கிறது. இதன்மூலம் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, சுமார் 2 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்பு பெறப்பட்டுள்ளது. வேலை தேடும் இளைஞர்களையும், வேலை வழங்கும் நிறுவனங்களையும் கட்டணம்இல்லாத தளத்தில் இணைக்கும் வகையில், vvvsi.com என்ற வேலைவாய்ப்பு இணையதளம் மதுரையில் தொடங்கப்பட்டது. இதை திறந்து வைத்த இந்த இயக்கத்தின் தலைவர் விஜய் சேதுபதி, ‘ஒரு இளைஞனுக்கு வேலை கிடைத்தால், அந்த குடும்பத்தின் எதிர்காலம் மாறிவிடும். அந்த மாற்றத்துக்கு வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை இயக்கம் உறுதியான பாலமாக இருந்து வருகிறது’ என்று சொன்னார்.

Related Stories: