சென்னை கோவை, நீலகிரி மாவட்டங்களில் 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் Jul 22, 2021 கோயம்புத்தூர் நீலகிரி வளிமண்டலவியல் திணைக்களம் சென்னை நீலகிரி தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை வளிமண்டலவியல் திணைக்களம் தின மலர் சென்னை: தமிழகத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் வரும் 26ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அவலாஞ்சியில் 12, பந்தலூரில் 7, கூடலூர், நடுவட்டத்தில் தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த ஒரு வாரமாக மழை பெய்கிறது. மாலை, இரவு நேரங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. வடமேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த பகுதியால் தமிழகத்தில் மழை பெய்வதற்கு வாய்ப்பு இல்லை. தமிழகத்தில் படிப்படியாக மழை குறைய தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும் என கூறியுள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. … The post கோவை, நீலகிரி மாவட்டங்களில் 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.
மெட்ரோ ரயில் பணியால் ஏற்படும் நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் புதிய இணைப்பு சாலைகள்: சாத்தியக்கூறுகள் ஆய்வு
ெசன்னை துறைமுகத்தில் இருந்து ₹35 கோடி மதிப்பு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கடத்திய வழக்கில் மாநகர பஸ் டிரைவர் கைது
அதிவேக உயிர்காக்கும் நடவடிக்கையாக காவேரி மருத்துவமனையில் இதய அதிர்ச்சி சிகிச்சை குழு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
மழைநீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை மணலி டி.பி.பி. சாலையில் தொடரும் விபத்துகள்: சீரமைக்க மக்கள் கோரிக்கை
பெரம்பூரில் கனமழை காரணமாக சுரங்கப்பாதையில் தேங்கிய நீர் இரவோடு இரவாக அகற்றம்: மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை
சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளால் சேதமடைந்த மழைநீர் வடிகால் கட்டமைப்புக்கு மாற்று ஏற்பாடு: மாநகராட்சியிடம் அறிக்கை சமர்பிப்பு