அம்பாத்துரை அமலிநகரில் ஜல்லி கொட்டியதோடு நிற்கும் சாலை பணி: அதிமுக ஆட்சியில் டெண்டர் விடப்பட்டது

சின்னாளபட்டி: ஆத்தூர் ஒன்றியம் அம்பாத்துரை ஊராட்சிக்குட்பட்டது அமலி நகர். இப்பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, ரூ.12 லட்சத்து 70ஆயிரம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் துவங்கியது. இதற்காக அப்பகுதியில் 3 இடங்களில் ஜல்லிக்கற்களை மலைபோல் குவிக்கப்பட்டன. ஆனால் அதன்பின் பணிகள் எதுவும் நடக்கவில்லை. இதனால் அந்த வழியாக டூவீலர்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்வோர் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.கடந்த வாரம் நடந்த ஒன்றியகுழு கூட்டத்தில், தார்ச்சாலை அமைக்கும் பணியை துவங்க கோரி ஒன்றியகுழு உறுப்பினர் நாகவள்ளி கோரிக்கை விடுத்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதுகுறித்து அம்பாத்துரை ஊராட்சிமன்ற துணைத்தலைவர் அருளானந்து கூறுகையில், ‘தார்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும். ஒப்பந்ததாரர் இதுவரை டெண்டர் எடுத்த இடத்தைகூட பார்க்கவில்லை. அதிமுக ஆட்சியில் விடப்பட்ட டெண்டரின் நிலைமை இப்படிதான் உள்ளது. அமலிநகரில் மாதா கோயில் திருவிழா நடைபெற இருப்பதால் சாலை பணிகளை விரைந்து துவங்கி முடிக்க வேண்டும்’ என்றார்….

The post அம்பாத்துரை அமலிநகரில் ஜல்லி கொட்டியதோடு நிற்கும் சாலை பணி: அதிமுக ஆட்சியில் டெண்டர் விடப்பட்டது appeared first on Dinakaran.

Related Stories: