தனி விமானத்தில் ‘விஜய் 67’

‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு தற்காலிகமாக ‘விஜய் 67’ என்று பெயரிடப்பட்டுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்க, அனிருத் இசை அமைக்கிறார்.

விஜய் ஜோடியாக திரிஷா நடிக்கிறார். 50 வயது தாதா கேரக்டரில் விஜய், அவருக்கு வில்லன்களாக சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின் உள்பட 6 முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.

இந்நிலையில், நேற்று படக்குழுவினர் தனி விமானத்தில் காஷ்மீர் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, கொடைக்கானல் பகுதிகளில் நடந்த படப்பிடிப்பை தொடர்ந்து, தற்போது காஷ்மீரில் படப்பிடிப்பு நடக்கிறது. இதில் சத்யராஜ், பிரியா ஆனந்த் உள்பட பலர் நடிக்கின்றனர்.

Related Stories: