சென்னை, நவ.24: அமேசான் பிரைம் வீடியோவின் ‘சுழல் - தி வோர்டெக்ஸ்’ என்ற தமிழ் வெப்தொடரை தொடர்ந்து இயக்குனர்கள் புஷ்கர், காயத்ரி தம்பதியின் வால்வாட்சர் பிலிம்ஸ் தயாரித்துள்ள வெப்தொடர், ‘வதந்தி - ஃபேபிள் ஆஃப் வெலோனி’. ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ளார். எஸ்.ஜே.சூர்யா, விவேக் பிரசன்னா, நாசர், லைலா, குமரன் தங்கராஜன், ஸ்மிருதி வெங்கட் ஆகியோருடன் வெலோனி கேரக்டரில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ளார்.