பட்டத்து அரசன் மூலம் தமிழுக்கு வரும் கன்னட நடிகை

சென்னை: திரைக்கு வந்த ‘சண்டிவீரன்’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஏ.சற்குணம் இயக்கத்தில் அதர்வா முரளி நடித்துள்ள படம், ‘பட்டத்து அரசன்’. லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். இதில் கன்னட நடிகை ஆஷிகா ரங்கநாத் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். முக்கிய வேடங்களில் ராஜ்கிரண், ராதிகா, ஆர்.கே.சுரேஷ், ராஜ் அய்யப்பன், ஜெயப்பிரகாஷ், சிங்கம்புலி, பாலசரவணன், ஜி.எம்.குமார், துரை சுதாகர், கன்னட நடிகர் ரவிகாளே, தெலுங்கு நடிகர் சத்ரு நடித்துள்ளனர். உண்மை சம்பவங்களை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றுப்படுகை, ஆடு பண்ணை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. ‘உஸ்தாத் ஹோட்டல்’ லோகநாதன் ஸ்ரீனிவாஸ் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். விவேகா, மணி அமுதவன், ஏ.சற்குணம் பாடல்கள் எழுதியுள்ளனர்.

Related Stories: