தனுஷ் ஜோடியாகிறார் பிரியங்கா

சென்னை: தனுஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் பிரியங்கா அருள் மோகன். சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், சிவகார்த்திகேயனுடன் டாக்டர், டான் படங்களில் நடித்தவர் பிரியங்கா அருள் மோகன். மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். இப்போது ஜெயம் ரவி ஜோடியாக ராஜேஷ் எம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் படம் கேப்டன் மில்லர். இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இவர், ராக்கி, சாணிக் காயிதம் படங்களை இயக்கியவர். இதில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க பிரியங்கா தேர்வாகியுள்ளார். இதே படத்தில் மற்றொரு ஹீரோயினாக நடிக்க நிவேதிதா சதீஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் சில்லுக்கருப்பட்டி உள்பட சில படங்களில் நடித்துள்ளார். தனுஷுக்கு வில்லனாக மலையாள நடிகர் ஜான் கோகன் நடிக்கிறார். இவர் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கேப்டன் மில்லர் படத்துக்காக தனுஷ் நீளமான தலைமுடியை வளர்த்திருக்கிறார். ஆக்‌ஷன் அட்வேஞ்சர் படமாக இது உருவாகிறது.

Related Stories: