2021ல் காயமின்றி தப்பித்தேன்: டாப்ஸி

கொரோனா காலத்திலும் பிசியாக இருக்கிறவர் டாப்ஸி. ராஷ்மி ராக்கெட் வெற்றி மகிழ்ச்சியில் இருக்கும் அவரது கையில்  இப்போதும் ப்ளர், சபாஷ் மிது, லூப் லபேட்டா உள்ளிட்ட படங்கள் இருக்கிறது. கடந்துவிட்ட 2021 மற்றும் வந்திருக்கும் 2022 பற்றி அவர் கூறியிருப்பதாவது:புத்தாண்டை நான் மிகவும் மகிழ்ச்சியாகக் கொண்டாடினேன், கடந்த ஆண்டு பல வழிகளில் சிரமங்கள் இருந்தது. அவற்றில் இருந்து நான் காயமின்றி தப்பித்தேன். கடந்த ஆண்டு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சவாலான ஆண்டாகும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு எளிமையாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த ஆண்டு என் பயணத்தை நிதானமாக தொடங்குகிறேன். நான் ஒரு படத்திலிருந்து இன்னொரு படத்திற்கு இடைவெளியில் வைத்துக் கொள்வேன். அது வைரஸ் தொற்றிலிருந்தும், ஊரடங்கிலிருந்தும் பாதுகாக்கும். என்றார்.

Related Stories: