மீண்டும் ஸ்ரத்தா சிவதாஸ்

மலையாள படங்களில் நடித்து வந்த ஸ்ரத்தா சிவதாஸ் தில்லுக்கு துட்டு இரண்டாம் பாகத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதற்பிறகு குரல் என்ற படத்தில் நடித்தார். அது வெளிவரவில்லை. இப்போது அறிமுக நாயகன் கார்த்திக் ஜோடியாக டூடி என்ற படத்தில் நடிக்கிறார். மற்றும் ஜீவா ரவி, ஸ்ரீ ரஞ்சனி , சனா ஷாலினி ஆகியோர் நடிக்கிறார்கள்.

படத்துக்கு கே.சி.பாலசாரங்கன் இசை அமைக்கிறார், மதன் சுந்தர்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்திக் மதுசூதனன் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: மனித உணர்வுகளின் மிகப்பெரிய உணர்வு என்றால் அது காதல்தான், அதற்கு எதிர்மறையானது கோபம். 18 வயதில் ஏற்படுகின்ற எண்ணங்கள் 25 வயதில் மாறும் 25 வயதில் ஏற்படும் எண்ணங்கள் 30 வயதில் மாறும் இதை அடிப்படையாக வைத்து  தான் இந்த படத்தின்  திரைக்கதையை உருவாக்கியுள்ளேன். என்றார்.

Related Stories: